ஆலங்குடி மோதல் சம்பவத்தில் 4 பேர் கைது

ஆலங்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 4 பேரை போலீசர் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பிளக்ஸ் தொழில் செய்து வந்த முருகானந்தம் மற்றும் ஜபருல்லா ஆகியோர் இடையே ஏற்பட்ட தகராறில் ஜபருல்லா தரப்பினர் முருகானந்தம் மற்றும் அவரது தந்தையை சரமாரி தாக்கினர். காயமடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஆலங்குடியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், கடைகள் சூறையாடப்பட்டன. பள்ளிவாசல் மீது கற்கள்வீசி தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் ஆலங்குடியில் நேற்று முன்தினம் கடைகள் அடைக்கப்பட்டன. 

இந்த நிலையில் இரு தரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இரு தரப்பினரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக  செயல்படமாட்டோம், இரு சமுதாயத்தினரும் என்றும் உள்ளது போல் ஒற்றுமையாக இருப்போம் என்று எழுதி கொடுத்தனர்.  

இந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் ரஹ்மான்,  ஹக்கிம், பட்டுக்கோட்டை தாலுகா கொல்லக்காடு பூவாளூர் பகுதியை சேர்ந்த ஹக்கீம் சாய்பு, ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்த அப்பாஸ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com