உலகின் பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

கின்னஸ் சாதனை படைத்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.விராட் போர்க்கப்பலை உடைப்பதற்கு இன்று ஏலம் விடப்படுகிறது.
ஐ.என்.எஸ் விராட்
ஐ.என்.எஸ் விராட்
Published on

மும்பை:

பொதுவாக ராணுவ தளவாடங்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குறிப்பிட்ட காலம் பயன்படுத்திய பிறகு மீண்டும் புதுப்பித்தலுக்கோ அல்லது முற்றிலும் சிதைவுக்கோ உட்படுத்தப்படும். 

அவ்வகையில், 30 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட்ட ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பல் இன்று தகர்க்கப்படுவதற்காக ஏலம் விடப்படுகிறது. 

முதன் முதலாக இந்த கப்பல் எச்.எம்.எஸ் ஹெர்ம்ஸ் பெயருடன் பிரிட்டன் ராயல் கடற்படையில் 1959ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.  ஹெர்ம்ஸ் 1959 முதல் 1984 வரை ராயல் கடற்படையில் சேவையில் இருந்தது. பின்னர் மறுசீரமைக்கப்பட்டு இந்திய கடற்படைக்கு 1987ம் ஆம் ஆண்டு விற்கப்பட்டது. இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ் விராட் என மறுபெயரிடப்பட்டது.

30 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையில் இருந்த விராட் கப்பலின் பயன்பாடு நிறுத்தப்பட்டதையடுத்து, அதனை உடைக்கும்படி கடந்த 2017 ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. 

அதற்கான பணிகள் அரசின் செயல்முறைகள் படி நடைபெற்று வந்த நிலையில், மெட்டல்ஸ் அண்ட் ஸ்கிராப் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த கப்பலை உடைப்பதற்கான ஏலத்தை இன்று நடத்தியது. ஐ.என்.எஸ். விராட் உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் என கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com