பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு
Published on

ரியாத்:

இஸ்லாமிய நாடான சவுதிஅரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து வருகிற 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் சவுதி அரேபிய அரசு, பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை நீக்கியதை தொடர்ந்து சவுதி பல்கலைகழகம் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இளவரசி நொரா பல்கலைக்கழகம் பெண்களுக்காக ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com