நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு

நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு கூடுதலான அதிகாரத்தை வழங்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு படை வீரர்கள்
பாதுகாப்பு படை வீரர்கள்
Published on

புதுடெல்லி:

பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.

போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசாருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது

நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com