வத்தலக்குண்டு அருகே தூக்கில் பிணமாக தொங்கிய அ.தி.மு.க. பிரமுகர்

வத்தலக்குண்டு அருகே தூக்கில் பிணமாக தொங்கிய அ.தி.மு.க. பிரமுகர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு பிரிவு பஸ் நிறுத்த பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்ததும் அவ்வழியே சென்றவர்கள் வத்தலக்குண்டு போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் வெள்ளை நிற சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். மேலும் அ.தி.மு.க. கட்சி கரை துண்டு உடன் வைத்திருந்தார். அ.தி.மு.க. பிரமுகராக இருக்கலாம். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com