பெருங்குடி அருகே அ.தி.மு.க. நிர்வாகி தற்கொலை

பெருங்குடி அருகே அ.தி.மு.க. நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருங்குடி அருகே அ.தி.மு.க. நிர்வாகி தற்கொலை
Published on

பேரையூர்:

மதுரை அருகே பெருங்குடி போலீஸ் சரகம் பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியபாண்டி (வயது54). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது வழியிலேயே பெரியபாண்டி உயிர் இழந்தார்.

இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியபாண்டியின் தற்கொலை பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com