ஐதராபாத்தை தொடர்ந்து மராட்டியத்திலும் பிரியா வாரியர் மீது புகார்

ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக படத்தின் டைரக்டர், நடிகை பிரியா வாரியர் மீது மராட்டிய போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை தொடர்ந்து மராட்டியத்திலும் பிரியா வாரியர் மீது புகார்
Published on

அந்த பாடல் காட்சியில் இடம் பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதே சமயம் இந்த பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீசில் அந்த படத்தின் டைரக்டர் உமர் லுலு மற்றும் நடிகை பிரியாவாரியர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு மராட்டிய மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள ஜின்சி போலீசில் இது தொடர்பாக சிலர் புகார் செய்துள்ளனர். அந்த புகாரில் ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் எனவே அந்த படத்தின் டைரக்டர் உமர் லுலு மற்றும் பாடல் காட்சியில் நடித்த நடிகை பிரியா வாரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த புகாரில் கூறி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com