வெள்ளகோவிலில் விபத்தில் வாலிபர் பலி

வெள்ளகோவில் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

வெள்ளகோவில்:

தர்மபுரியை சேர்ந்தவர் லோகுமணி(வயது 44). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கடைவீதி பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற பஸ்சை லோகுமணி முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com