பொள்ளாச்சியில் வாகனம் மோதி தொழிலாளி பலி

பொள்ளாச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

கோவை:

கோவை பொள்ளாச்சி குமிட்டிபதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (வயது 41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயகணேஷ் பலத்த காயம் அடைந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் ஜெயகணேசை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com