

சென்னை:
புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 32 தடுப்பணைகள் கட்டியுள்ளது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டதன் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் குடிநீருக்கே கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயமும் பொய்த்துப்போய் விட்டது.
பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் ஆகிய அனைத்து தரப்பினரும் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலையில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் அப்பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி ஆந்திர அரசைக்கண்டித்து புதிய நீதிக்கட்சியின் சார்பில் கண்ட ஆர்பாட்டம் நடைபெறும்” என்று கூறி உள்ளார்.