

சென்னை:
இந்தநிலையில் இந்திய உணவு பாதுகாப்பு நிறுவனம் பால் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்களின் பாலை ஆய்வு செய்தது. சமீபத்தில் நடந்த ஆய்வில் சில நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் வந்திருப்பது தெரியவந்தது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யும் பாலை ரசாயன சோதனை செய்ய வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் முகவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பால் ரசாயன பரிசோதனை செய்யப்படுகிறது. பால் பரிசோதனை செய்வதற்கான சான்றிதழ்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
அதில் கொள்முதல் செய்யப்பட்ட பாலின் தரம் பாலில் ரசாயன தன்மை உள்ளதா என்பது பற்றிய விவரம் குறிப்பிடப்படும். இதுதவிர பாலை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பாலில் ரசாயன தன்மையை அறியும் கருவிகளை பொருத்த வேண்டும். இதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.