ஆந்திராவில் ஆசிரியர் அடித்ததால் 9 வயது மாணவன் பலி

ஆந்திராவில் ஆசிரியர் அடித்ததால் 9 வயது மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த சுந்திரா புட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் மோகன கிருஷ்ணன். 9 வயதான அவன் அங்குள்ள மண்டல் பரி‌ஷத் தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறான்.

கடந்த வாரம் மோகன கிருஷ்ணனை ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார். இதனால் அவன் உடல்நலம் பாதிக்கப்பட்டான்.

இதனைதொடர்ந்து மாணவனை அவனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனான். ஆசிரியர் கடுமையாக அடித்ததால் 1 வாரத்துக்கு பிறகு மாணவன் இறந்தது தெரிய வந்தது.

ஆசிரியர் அடித்ததால் தனது மகன் பலியானதாக மாணவனின் தந்தை ராம மூர்த்தி போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாவட்ட கல்வி அதிகாரியும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் அவர் மீது முதல்கட்டமாக எந்த நடவடிக்கையும் எடுக்க கல்வி அதிகாரி மறுத்துவிட்டார். விசாரணைக்கு பிறகும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகும் தான் முடிவெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com