ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு இடையில் துப்பாக்கி சண்டை - 9 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் போலீசாருக்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 பேர் உயிரிழந்தனர்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டம், தமானி என்ற இடத்தில் நேற்றிரவு இரு போலிசார் தங்களுடன் பணியாற்றும் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த 9 போலீசார் பரிதாபம்மாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com