8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: சமையல்காரர் கைது

கோவையில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

சரவணம்பட்டி:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனியல் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கோவை அத்திப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு மெஸ்சில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் டேனியல் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதுகுறித்து சிறுவனின் தாயார் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் டேனியல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com