வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரம் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம்: ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரத்து 744 இறந்து போனவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரம் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம்: ராஜேஷ் லக்கானி தகவல்
Published on

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களை சேர்ப்பதற்காக கடந்த 1 மாதம் சிறப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் ஜூலை 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

இந்த பணிகளின் போது ஆன்லைன் மூலம் 51 ஆயிரத்து 566 விண்ணப்பங்களும், நேரடியாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 132 விண்ணப்பங்களும் சேர்ந்து மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 698 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இளைஞர்களை தவிர மற்ற வாக்காளர்களிடம் இருந்து 2 லட்சத்து 8 ஆயிரத்து 244 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதன்படி அனைத்து வயதுடைய வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 942 ஆகும்.

இதில் 1-ந்தேதி வரை ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை 3 லட்சத்து 58 ஆயிரத்து 743 ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள் பெயர்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 797 இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் இதுவரை 83 ஆயிரத்து 744 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மற்றவைகளை நீக்க மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com