டெல்லியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த ஓட்டல் அதிபர்

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்தியை டி.வி.யில் பார்த்த ஓட்டல் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த ஓட்டல் அதிபர்
Published on

மும்பை:

மும்பை கோரேகாவ் கிழக்கு, பிலிம் சிட்டி ரோட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ணா (வயது 63). இவர் அந்தேரி, சக்காலா பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரது ஓட்டல் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும், அவர் சமீபத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து டி.வி.யில் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து தனது மகளிடம் அதிகம் விவாதித்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கிருஷ்ணா வெகு நேரமாகியும் படுக்கை அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது, கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதனால் பதறிப்போன அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கிருஷ்ணாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com