60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத வழக்கு

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டிக்கும் 22 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பாக மூதாட்டியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
காதல்
காதல்
Published on

ஆக்ரா:

ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் எட்மாடுடாவுலா காவல் நிலையத்திற்கு வினோதமான புகார் ஒன்று வந்தது. ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவர் அந்த புகாரை அளித்தார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் தன் மனைவிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டி, இளைஞன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர்.

மூதாட்டியும் இளைஞனும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் போலீசாரிடம் கூறினர். ‘இந்த திருமண முடிவு தவறானது. இருவரும் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என குடும்பத்தினர் மற்றும் போலீசார் அறிவுரை கூறினர்.

அதை ஏற்காமல் இருவரும் பிடிவாதம் பிடித்ததால் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com