மத்தியபிரதேசம்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி

மத்தியபிரதேசம் மாநிலத்தின் சிவ்புரி மாவட்டத்தில் இன்று ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான லாரி - ஆட்டோ
விபத்துக்குள்ளான லாரி - ஆட்டோ
Published on

போபால்:

மத்தியபிரதேசம் மாநிலத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள மும்பை - ஆக்ரா தேசிய நெடுச்சாலையில் பயணிகள் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆட்டோ கொலரஸ் என்ற பகுதியை கடந்த போது சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது நேருக்குநேர் மோதியது.

இந்த கோரவிபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com