

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யப்பேட்டை மாவட்டத்தில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் செல்லும் அரசு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதில் 36-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். முனகலா காவல் நிலைய எல்லையில் வந்த போது திடீரென அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பஸ் டிரைவர் மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.