நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

படகில் திடீர் பழுது ஏற்பட்டதால் நடுக்கடலுக்குள் மூழ்க தொடங்கிய மீனவர்கள் 6 பேரை மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று மீட்டனர்.
மீட்பு
மீட்பு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 43). மீனவர். இவர் தனது நாட்டுப்படகில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் பிரசாத் (39), ஆரோக்கியம் (30), ஜேம்ஸ் (30), ஜெரால்டு (35), பிதேலி (35) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக படகில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் படகு கடலுக்குள் மூழ்க தொடங்கியது. படகில் இருந்த 6 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். மேலும், படகையும் கயிறு கட்டி திரேஸ்புரம் கரைக்கு இழுத்து வந்தனர். இதனால் 6 மீனவர்களும் பத்திரமாக கரைக்கு திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com