ஈரானில் நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி- 24 பேர் காயம்

ஈரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்தார்.
ஈரான் நிலநடுக்கம்
ஈரான் நிலநடுக்கம்
Published on

டெஹ்ரான்:

ஈரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள குசேஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட மஸ்ஜித் சுலைமான் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்நாட்டு நேரப்படி காலை 11.30 மணியளவில் பூமியின் அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 அலகுகளாக பதிவானதாக ஈரான் புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியானதாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com