ஓ.பி.எஸ். அணியில் 500 பேர் இணைந்தனர்

தஞ்சை தெற்கு, வடக்கு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட சுமார் 500 பேர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா கட்சியில் இணைந்தனர்.
ஓ.பி.எஸ். அணியில் 500 பேர் இணைந்தனர்
Published on

சென்னை:

அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா பொருளாளர், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அவரது கணவர் கோபால் தலைமையில் தஞ்சாவூர் தெற்கு கழகத்தின் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட சுமார் 500 பேர் வடக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து இணைந்தனர்.

இந்த நிகழ்வில் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், முனுசாமி, நத்தம் விசுவநாதன், மைத்ரேயன் எம்.பி. முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், ஜெயபால், சுப்ரமணியன் கே.சி. பழனிசாமி, நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com