ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைப்பு - போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின

ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடின.
ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைப்பு - போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின
Published on

ஈரோடு:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மீதி 50 சதவீத கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. ஈரோடு கடை வீதிகளிலும் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் பழ வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர்.

அதே சமயம் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடியது. ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடியது. பஸ்களில் அதிகளவில் கூட்டம் இல்லை. மேலும் ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்டத்தில் முக்கிய ஊர்களான கோபி, சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் போன்ற அனைத்து ஊர்களிலும் 50 சதவீத கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

அதே சமயம் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை வழக்கம் போல் ஓடியது.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். மாவட்டம் முழுவதும் 1500 வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com