ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 தொழிலாளர்கள் பலி

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பில் ராணுவ வீரர்கள்
தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பில் ராணுவ வீரர்கள்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூர்ஷிதாபாத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆய்வுசெய்ய ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு ஸ்ரீநகர் வந்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com