

மதுரை:
நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள வடிவேல் கரை சுடுகாட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். இதில் 2.600 கிலோ கஞ்சா, ரூ.200 ரொக்கம் ஆகியவை பிடிபட்டது.
அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 30), கீழக்குயில்குடி தெற்கு தெருவை சேர்ந்த பாண்டியன் மனைவி பாண்டியம்மாள் (45) ஆகிய இருவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர்.
வாலந்தூர் அருகில் உள்ள கோவிலாங்குளம் கண்மாய்க்கரையில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வனிதா சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். இதில் 2 கிலோ கஞ்சா பிடிபட்டது.
அதே பகுதியை சேர்ந்த காரல்மாக்ஸ் (வயது 39) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.