ஜம்மு-காஷ்மீர்: தற்கொலைப்படை தாக்குதல்: 5 இந்திய வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.#JammuKashmir
ஜம்மு-காஷ்மீர்: தற்கொலைப்படை தாக்குதல்: 5 இந்திய வீரர்கள் பலி
Published on

ஜம்மு:

ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் படையினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தின் மீது இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ மொகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றோரு தீவிரவாதியும் கொல்லப்பட்டுள்ளான். ஆனால் அவனது உடல் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சி.ஆர்.பி.எப். பயிற்சி மையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

#TamilNews #PakistanTerrorist #Suicideattack #PulwamaEncounter #JammuKashmir

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com