மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற நண்பர்கள் 5 பேர் கைது

வில்லியனூர் அருகே மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே நடராஜன் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது28) பெயிண்டர். இவரும் அதே பகுதியை சேர்ந்த மாடுமணி (29), அய்யப்பன் (28) மற்றும் அலெக்ஸ், பாலாஜி, சரண்ராஜ் ஆகியோரும் நண்பர்கள்.

சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் அதே பகுதியில் அமர்ந்து மதுகுடித்து கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் ஆல்பர்ட் நண்பர்களை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாடுமணி உள்பட 5 பேரும் சேர்ந்து ஆல்பர்ட்டை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஆல்பர்ட்டை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் ஆல்பர்ட் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆல்பர்ட்டின் தாயார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஆகியோர் வழக்குபதிவு செய்து மாடுமணி உள்ளிட்ட 5 பேரையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நின்றிருந்த அய்யப்பன், சரண்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை கோபாலன்கடை பகுதியில் பதுங்கி இருந்த மாடுமணி மற்றம் அலெக்ஸ், பாலாஜி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com