சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது

தமிழக அரசு காலியாக உள்ள 4 லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பக்கோரியும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரியும் சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது
Published on

சேலம்:

தமிழக அரசு காலியாக உள்ள 4 லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பக்கோரியும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மறியல் போராட்டம் நடந்தது.

இந்த மறியல் போராட்டத்திற்கு மாநில தலைவர் ரெஜிஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4-பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com