கொல்கத்தா: மெட்ரோ ரெயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டில் கோளாறு - 4 பேர் காயம்

கொல்கத்தா நகரில் உள்ள கவி சுபாஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நகரும் மின்சார படிக்கட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் இன்று நான்கு பேர் காயமடைந்தனர்.
விளக்கப்படம்
விளக்கப்படம்
Published on

கொல்கத்தா:

கொல்கத்தா நகரில் உள்ள கவி சுபாஸ் மெட்ரோ ரெயில் நிலையம் இன்று காலை வழக்கம்போல் பயணிகளின் நடமாட்டத்தால் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

சுமார் 10.30 மணியளவில் அங்கிருந்த ஒரு நகரும் மின்சார படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) சென்றவர்கள் திடீரென்று நிலை குலைந்து தடுமாறினர். மேல்நோக்கி சென்ற படிக்கட்டுகளின் கைப்பிடி மட்டும் திடீரென்று கீழ்நோக்கி நகர்ந்ததால் ஏற்பட்ட திடீர் தடுமாற்றத்தால் சில பயணிகள் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.

அவர்களில் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உரிய சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர் என கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com