கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையை தடுக்க 36 கண்காணிப்பு கேமரா

கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையை தடுக்க 36 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையை தடுக்க 36 கண்காணிப்பு கேமரா
Published on

பெரம்பூர்:

கொடுங்கையூர், முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், எவரெடி காலனி பகுதிகளில் தொடர் திருட்டு வழிப்பறி, கொள்ளை, வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.

இதை தடுக்க யூனியன்கார்டு காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அந்த பகுதியில் 36 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதனை புளியந்தோப்பு துணை கமி‌ஷனர் சாய்சரன், தேஜஸ்வி, உதவி கமி‌ஷனர் அழகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சங்க தலைவர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com