காவலரை கடத்திக் கொன்ற பயங்கரவாதிகளில் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Kulgam
காவலரை கடத்திக் கொன்ற பயங்கரவாதிகளில் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குல்காம் பகுதியில் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படைகளின் வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்னும் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com