நிலம் ஆக்கிரமிப்பில் கணவன்-மனைவி மீது தாக்குதல் - 3 பேர் கைது

புதுவை வில்லியனூர் அருகே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வில்லியனூர்:

புதுவை தொண்டா மாநத்தம் மாஞ்சலை வீதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(65) இவரது மனைவி லதா (வயது55).

அர்ஜுனன் அதே பகுதியை சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு காவல்காரராக இருந்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் இந்த நிலத்தில் குறிப்பிட்ட அளவு தனக்கும் உரிமை என கூறி பிரச்சினையில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் செந்தில்குமார் மற்றும் துரைசாமி ஆகியோர் சேர்ந்து அந்த நிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் முள்வேலி அமைத்து கட்டிடம் கட்டினார்கள். மேலும் ஆழ்குழாய் கிணற்றை சேதப்படுத்தினார்கள்.

இதனை லதா, அர்ஜுனன் தட்டிக் கேட்டபோது அய்யப்பன், லதாவையும், அவரது கணவர் அர்ஜுனனையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவரும், அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து கையாலும், தடியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் லதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அய்யப்பன் அவரது நண்பர்கள் செந்தில்குமார், துரைசாமி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com