

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 52 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதவ் 6 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து இருந்தது. பிரித்விஷா 70 ரன் எடுத்தார். ரகானே 75 ரன்னும், ரிசப்பந்த் 85 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரகானேயும், ரிஷப்பந்தும் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.
ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் ரகானே ஆட்டம் இழந்தார். அவர் 183 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 314 ஆக இருந்தது.
அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஹோல்டரின் 30 ஓவரில் ரகானேயும் (முதல் பந்து), ஜடேஜா (3-வது பந்து) பெவிலியன் திரும்பினார்கள்.
ரிசப்பந்த் 2-வது முறையாக செஞ்சூரியை தவறவிட்டார். ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டிலும் அவர் 92 ரன்னில் வெளியேறி இருந்தார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 322 ஆக இருந்தது. 8 ரன்னில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்தது.