

ஜெர்மனி:
பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் 2018 மாடலில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேசிஸ், ஸ்விங் ஆர்ம் மற்றும் வடிவமைப்புகளில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது சமீபத்திய டெஸ்டிங்-இன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களும் தங்களின் லிட்டர்-கிளாஸ் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடல்களில் அதிநவீன மின்சாதன அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின்களை வழங்கி வருகின்றன.
பி.எம்.டபுள்யூ. ஃபிளாக்ஷிப் மாடலான S1000RR-இல் தலைசிறந்த செயல்திறன் மற்றும் கிளாஸ்-லீடிங் டைனமிக்ஸ் மற்றும் மின்னணு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக 2015-ம் ஆண்டு S1000RR மாடலுக்கு அப்டேட் வழங்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் அப்டேட் வழங்கப்படுவதால் அதிகப்படியான மாற்றங்களின் மூலம் சந்தையில் நிலவும் போட்டியை பலப்படுத்த பி.எம்.டபுள்யூ. திட்டமிட்டுள்ளது.
புதிய 2018 S1000RR ஜெர்மனியில் டெஸ்டிங் செய்யப்பட்டது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. டெஸ்ட் பைக்கில் மாற்றியமைக்கப்பட்ட இன்ஜின் கேசிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2018 மாடலின் இன்ஜின் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ 4 மட்டுமின்றி முந்தைய மாடல்களை விட அதிக சக்திவாய்ந்த புதிய இன்ஜின் இந்த மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் இருக்கும் மாடல்களில் 999சிசி, நான்கு சிலிண்டர் கொண்ட இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 194PS-ஐ 13000rpm மற்றும் 112Nm பீக் டார்கியூ கொண்டுள்ளது. புதிய புகைப்படங்களில் இந்த மாடலில் வித்தியாசமான எக்சாஸ்ட் மஃப்ளர், முன்பக்கம் பெரிய டிஸ்க் ரோட்டார் மற்றும் அழகிய வடிவமைப்புகளை கொண்டுள்ளது.
மின்சாதன அம்சங்களை பொருத்த வரை புதிய பி.எம்.டபுள்யூ. 2018 S1000RR மாடலில் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 6-ஆக்சஸ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், லான்ச் கன்ட்ரோல், மாற்றக் கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், கார்னரிங் ABS உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மாடல் 2017 EICMA மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
இதே விழாவில் டுகாட்டி பேனிகேல் V4 மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடலில் V4 நான்கு சிலின்டர் கொண்ட இன்ஜின் மற்றும் V-கான்ஃபிகரேஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்திய விற்பனையின் போது புதிய பி.எம்.டபுள்யூ. S1000RR மாடல் சுசுகி GSX-R1000, யமஹா R1, கவாசகி நின்ஜா ZX-10R, அப்ரிலியா RSV4, எம்.வி. ஆகஸ்டா F4 மற்றும் டுகாட்டி 1299 பேனிகேல் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.