தஞ்சை அருகே கள்ள சாராயம் காய்ச்சிய 2 வாலிபர்கள் கைது

தஞ்சை அருகே உள்ள கூடலூரில் உள்ள ஒரு வாழைதோப்பில் சாராயம் காய்ச்சிய 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள கூடலூரில் உள்ள ஒரு வாழைதோப்பில் சாராயம் ஊறல் பதுக்கி வைத்து காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அங்குள்ள வாழைத்தோப்பில் 300 லிட்டர் சாராய ஊறல் பேரலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அதனை அழித்தனர்.

இது தொடர்பாக கூடலூரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 35), பிரகாஸ் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com