ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று நடந்த என்கவுண்டரில், 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
தேடுதல் வேட்டையில் ராணுவம் (கோப்பு படம்)
தேடுதல் வேட்டையில் ராணுவம் (கோப்பு படம்)
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வேட்டையில், பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில், குல்காம் மாவட்டம் மன்ஸ்காம் பகுதியில் உள்ள மிர்வானி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.  இதையடுத்து அப்பகுதியை ராஷ்டிரிய ரைபிள் பிரிவு வீரர்கள், சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். முதலில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும், ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு தொடங்கப்பட்ட ஐஎஸ்ஜேகே பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர்கள் என  தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com