காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் 13 நாள் தேடுதலுக்கு பிறகு கந்தர்பால் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று கைது செய்தனர். இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கைது
கைது
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி முற்றுகையிட்டனர்.

இதில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். மற்ற பயங்கரவாதிகள் தப்பி சென்றனர். அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் 13 நாள் தேடுதலுக்கு பிறகு கந்தர்பால் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று கைது செய்தனர். இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இரு பயங்கரவாதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com