வடமாநில பெண் அதிகாரியை கட்டிப்பிடித்து முத்தம்: 2 வாலிபர்கள் அட்டகாசம்

சாலையில் நடந்து சென்ற வடமாநில பெண் அதிகாரியை கட்டிப்பிடித்து முத்தம் செய்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
முத்தம்
முத்தம்
Published on

புதுச்சேரி:

புதுவை திருபுவனையில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் மும்பையை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் வர்த்தக மானேஜராக பணியாற்றி வருகிறார்.

புதுவை ரெயின்போ நகரில் குடியிருக்கிறார். இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அதில் இருந்து இறங்கிய அவர்கள் திடீரென அந்த பெண்ணிடம் அத்துமீறிலில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். உடனே அந்த பெண் கூச்சலிட்டார்.

இதனால் அவரை அடித்து கீழே தள்ளினார்கள். பின்னர் அவர்கள் இருவரும் அவரை மானபங்கம் செய்தனர். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே 2 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக அந்த பெண் பெரியகடை போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.

அந்த வாலிபர்கள் யார்? என்று தெரியவில்லை. அந்த பகுதியில் உள்ள ரவுடிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவம் நடந்த பகுதியில் பல வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. அதை வைத்து வாலிபர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com