திருச்சியில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து- நண்பர்கள் 2 பேர் கைது

தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
திருச்சியில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து- நண்பர்கள் 2 பேர் கைது
Published on

திருச்சி:

திருச்சி சங்கரன் பிள்ளை காலனியை சேர்ந்தவர் முகில்குமார் (வயது 20). இவரது நண்பர்கள் சசிகுமார் (29), தினேஷ் (24) மற்றும் ஆளவந்தான். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர். இந் நிலையில் சசிகுமார், முகில்குமாருக்கு போன் செய்து சமாதானம் பேச அழைத்தார். இதனை தொடர்ந்து முகில்குமார் சிந்தாமணியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். அங்கு நண்பர்கள் 3 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த தினேஷ் பீர் பாட்டிலை உடைத்து முகில்குமாரை குத்தினார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆளவந்தானை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com