மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அபுசலீம், கரிமுல்லா கானுக்கு ஆயுள் தண்டனை

1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அபுசலீம், கரிமுல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அபுசலீம், கரிமுல்லா கானுக்கு ஆயுள் தண்டனை
Published on

மும்பை:

1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயம் அடைந்தனர்.

நிழல் உலக தாதா ராவூத் இப்ராகீம் மேற்பார்வையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தாவூத் இப்ராகீம் கூட்டாளியான அபுசலீம், பெரோஸ் அப்துல் ரசீத்கான், தாகீர் மெர்ச்சன்ட், கரிமுல்லாகான், ரியாஸ் சித்திக் ஆகியோரை குற்றவாளி என்று ஏற்கனவே கோர்ட்டு அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

அப்போது அபுசலீம், கரி முல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அபுசலீமுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளிகளான தாகீர் மெர்ச்சன்ட், பெரோஸ்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ரியாஸ் சித்திக்குக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com