துப்பாக்கிச்சுடும் போட்டி: உலக சாதனையுடன் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயதே ஆன சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
துப்பாக்கிச்சுடும் போட்டி: உலக சாதனையுடன் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி
Published on

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச்சில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 17 வயதே ஆன இளைஞர் சவுரப் சவுத்ரி கலந்து கொண்டார்.

அவர் 246.3 புள்ளிகள் பெற்று சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு இவர் 245 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையைாக இருந்து. தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

சவுரப் சவுத்ரி கடந்த ஆண்டு ஆசிய போட்டி, யூத் ஒலிம்பிக் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com