மகளின் தோழியை கற்பழித்து கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

திருச்சியில் மகளின் தோழியை கற்பழித்து கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
நீதிமன்றம்
நீதிமன்றம்
Published on

திருச்சி:

திருச்சி திருவானைக்காவல் மணல்மேடு 5-ம் பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 39), புரோட்டா மாஸ்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 15 வயதில் மகள் உள்ளனர். மகள் அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி செல்வியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ம் வகுப்பு படித்து வந்தார். வீடு அருகருகே இருந்ததால் செல்வி, நடராஜன் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரது மகளுடன் பேசுவதுண்டு. இதனால் நடராஜனும், செல்வியும் பேசி பழகி வந்தனர்.

இந்தநிலையில் செல்வி மீது நடராஜனுக்கு திடீரென மோகம் ஏற்பட்டது. செல்வியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணிய அவர், வீட்டில் மனைவி, மகள் இல்லாத நேரத்தில் செல்வி வரும் போது, அவரை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். மகள் வயதில் உள்ள சிறுமி என்றும் பாராமல் நடராஜன் செல்வியை பலமுறை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். இதனால் செல்வி கர்ப்பமடைந்தார்.

இதையறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், இது பற்றி கேட்ட போது செல்வி நடந்த விவரத்தை கூறினார். இந்த சம்பவம் கடந்த 17-11-2017 அன்று நடந்தது.

இது குறித்து செல்வியின் பெற்றோர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி வனிதா இன்று தீர்ப்பு கூறினார். அதில் மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய நடராஜனுக்கு 12ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நடராஜன் கற்பழித்ததால் கர்ப்பமான செல்வி திடீரென கீழே விழுந்ததில் அவரது கர்ப்பம் கலைந்ததுடன், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com