பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கம் கோவிலில் 15 கடைகளுக்கு சீல்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் 34 கடைகளும், கோவில் வளாகம் வெளியே உள்ள 18 கடைகள் ஆக மொத்தம் 52 கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கம் கோவிலில் 15 கடைகளுக்கு சீல்
Published on

ஸ்ரீரங்கம்:

மதுரை தீ விபத்து சம்பவம் போல் நடைபெறாமல் இருக்கவும் பாதுகாப்பு நலன் கருதியும் கோவில் நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்ய வலியுறுத்தப்பட்டது.

இதையடு்த்து நேற்று மாலை வடக்குவாசல் கோபுரத்தில் உள்ள 4 கடைகள், மேலவாசல் கோபுரத்தில் உள்ள 3 கடைகள், கீழவாசல் கோபுரத்தில் உள்ள 4 கடைகள், தெற்குவாசல் கோபுரத்தில் உள்ள 4 கடைகள் என மொத்தம் 15 கடைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அகற்றப்பட்டன.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com