

சென்னை:
தி.நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் கூறியதாவது:
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததாக 13 பேரை கைது செய்துள்ளோம்.
ஆந்திராவை சேர்ந்த ஒருவர் உட்பட 13 பேரை கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்துள்ளோம்.
கல்லூரி மாணவர்களை குறிவைத்து மூளைசலவை செய்து வாட்ஸ் அப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
கல்லூரியை விட்டு வெளியேறும் மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.