மியான்மரில் இருந்து வாகனத்தில் கடத்திய 20 கிலோ தங்கம் பிடிபட்டது

மணிப்பூர் மாநிலத்தில் வாகனத்தில் கடத்தப்பட்ட 20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
மியான்மரில் இருந்து வாகனத்தில் கடத்திய 20 கிலோ தங்கம் பிடிபட்டது
Published on

இம்பால்:

மணிப்பூர் மாநில தலைநகரான இம்பால் நகரின் வழியாக மியான்மரில் இருந்து தங்க கடத்தல் நடைபெறுவதாக  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மேற்கு இம்பால் மாவட்டத்தில் இம்பால் - ஜிரிபாம் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இன்று காலை யும்லேம்பாம் பகுதி வழியாக வந்த இரு வாகனத்தை வழிமறித்து, சோதனையிட்டபோது வாகனத்துக்குள் 1.95 கிலோ எடையுள்ள 12 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தங்கத்தை கடத்திவந்த கார் டிரைவர் முஹம்மது நஜிமுதீன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிடிபட்ட தங்கத்தின் உள்நாட்டு மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com