திருமண நிகழ்ச்சியில் 11 வயது சிறுமியை கற்பழித்து கல்லால் அடித்து கொன்ற வாலிபர்

சத்தீஸ்கரில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வயது சிறுமியை மணமகனின் நண்பர் கற்பழித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் 11 வயது சிறுமியை கற்பழித்து கல்லால் அடித்து கொன்ற வாலிபர்
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள போதி கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வயது சிறுமியை மணமகனின் நண்பர் சாகு சாக்லேட் மற்றும் குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அருகிலிருந்த செங்கலை எடுத்து அடித்து கொன்றார். அதன் பின் யாருக்கும் தெரியாமல் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். சிறுமியை காணாததால் உறவினர்கள் தேடியுள்ளர். சாகு சிறுமியை அழைத்துச் சென்றதை பார்த்த சிலர் அவரிடம் விசாரித்தனர். சாகு சட்டையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாகுவை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதே போன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் திருமண நிகழ்ச்சியில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். திருமண நிகழ்ச்சியில் தொடரும் கற்பழிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. #EnoughIsEnough

X

Maalai Malar
www.maalaimalar.com