பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கைது

எம்.ஜி.ஆர்.நகரில் 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

போரூர்:

எம்.ஜி.ஆர் நகர் சூளைப்பள்ளம் சிவா விஷ்ணு கோவில் தெருவைச் சேர்ந்த 11வயது சிறுமி கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதி ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது67).

மாணவி பள்ளி முடிந்து தினந்தோறும் முருகன் வீட்டு வழியாக நடந்து செல்வது வழக்கம். நேற்று மாலை 4.30 மணி அளவில் அவ்வழியே தனியாக சென்று கொண்டிருந்த மாணவியிடம் முருகன் நலம் விசாரித்து அன்பாக பேச்சு கொடுத்தார்.

பின்னர் தனது வீட்டிற்கு வருமாறு மாணவியை அழைத்து சென்றார். வீட்டிற்குள் சென்ற மாணவியிடம் திடீரென முருகன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார்.

அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பி அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தாயிடம் தெரிவித்தார். உடனடியாக மாணவியின் தாய் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் முருகனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது தெரிந்தது. முருகன் ஏற்கனவே 2 முறை மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com