பாலமேடு ஜல்லிக்கட்டு: 11 வீரர்கள் காயம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் காலை 12 மணி வரை 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனே ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு: 11 வீரர்கள் காயம்
Published on

அலங்காநல்லூர்:

பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் சுற்றி வளைத்து அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் வீரர்களின் கையில் சிக்காமல் நழுவி சென்றது.

காளைகள் முட்டியதில் காலை 12 மணி வரை 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனே ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வந்திருந்த விலங்குகள் நல வாரிய குழுவினர் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com