சிறுமுகை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
சிறுமுகை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ளது செட்டிபாளையம். இந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று சிறுமி அந்த பகுதியில் விளையாட முயன்றாள்.

அப்போது அதே பகுதியை சேர்ந்ந்த வேலுச்சாமி (வயது 22) என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறி சத்தம்போட்டாள். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறுமியை மீட்டனர். பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமியை துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com