கொடைக்கானலில் 10 ஏக்கர் பரப்பளவில் ரோஜா தோட்டம்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் ரோஜா தோட்டம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
கொடைக்கானலில் 10 ஏக்கர் பரப்பளவில் ரோஜா தோட்டம்
Published on

கொடைக்கானல்:

சுற்றுலா தலமான கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் இடம்பெற்ற பல்வேறு வகையான மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். படகு போட்டி, வாத்து பிடிக்கும் போட்டிகளும் நடத்தப்பட்டன.

சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, ஊஞ்சல், ரோலிங் ராட்டிணம், இசை நீரூற்று போன்ற அம்சங்கள் 4 ஏக்கர் பரப்பளவில் புல் தரை அமைத்து பராமரிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரோஜா தோட்டம் அமைக்கப்படுகிறது.

இது குறித்து வேளாண்மைத்துறை ஆணையாளர் விஜயகுமார் ரூ.9 கோடி செலவில் உருவாக உள்ள இந்த ரோஜா தோட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள அபூர்வ வகை ரோஜா செடிகள் நடப்படும். இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரோஜா தோட்டம் அமைக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com